துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி மாவட்டம், துறையூர்-திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் துறையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வடமலை தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் போதை ஆசாமிகள் இருவர் வருவதை பார்த்த உதவி ஆய்வாளர் வடமலை அவர்களது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த போதை ஆசாமி வாகனத்திலிருந்து கீழே இறங்கி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வடமலையை ஓங்கி அடித்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை அருகிலிருந்த கடை வாசலில் அமர வைத்தனர். விசாரணையில், போலீஸ்காரரை தாக்கியவர் துறையூர் கிழக்கு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.