உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருச்சி மாணவர் தேர்வு
உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நான்காவது உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அளவில் காதுகேளாதோர் தடகள கவுன்சில் சார்பில் புதுடெல்லி ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் ஜூலை 22ம் தேதி நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் கே.மணிகண்டன் 100 மீட்டர் தடகள ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா சார்பாக போலந்து நாட்டில் நடைபெறும் உலக காதுகேளாதோர் தடகள போட்டியிலும் மணிகண்டன் கலந்துகொள்ள உள்ளார்.