துறையூர் அருகே மணவறை அலங்காரம் செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி வாலிபர் துறையூர் அருகே திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.;

Update: 2022-03-07 15:15 GMT

 சரத்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள்மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வருகின்ற 13-ந் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக மணவறை அலங்காரம் செய்வதற்காக, திருச்சி திருவாானைக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரது மகன் சரத் (வயது 24) வேலை செய்து வந்துள்ளார். அவர் தனது 20 பேர் கொண்ட குழுவினருடன் டெம்போ லாரி மூலம் பொருட்களை ஏற்றிக் கொண்டு துறையூருக்கு வந்துள்ளார்.

அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை மற்ற நபர்கள் மண்டபத்தினுள் எடுத்துச் செல்ல, திருமண மண்டபத்தின் முன்பு லாரியிலிருந்து மணவறையை சரத் மட்டும் 20 அடி நீளமுள்ள இரும்பு பைப்பை கையில் எடுத்தவர் செங்குத்தாக பைப்பினை மண்டபத்தினுள் எடுத்துச் செல்ல முயன்ற போது, மண்டபத்தின் வெளியில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி மீது இரும்பு பைப் உரசியது.

இதில் சரத் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன்னுடன் வேலைக்கு வந்த சரத் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைக் கண்டு அவருடன் வந்த இளைஞர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் வைத்தது.

Tags:    

Similar News