பச்சமலை சாலையை சீரமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு

பச்சமலை சாலையை சீரமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-18 11:32 GMT

பச்சமலைக்கு செல்லும் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் பச்சமலையும் ஒன்று. மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பச்சமலையின் மற்றொரு பகுதியாக கொல்லை  மலையும் உள்ளது. 

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள பச்சமலையில் இன்னமும் மலைவாழ் இன மக்களான பழங்குடிகள் வசித்து வருகிறார்கள்.இயற்கை எழில் கொஞ்சும் பச்சமலையில் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் தங்கி மகிழ்வதற்காக மரவீடுகள் உள்ளன. இது தவிர அங்குள்ள நீர் வீழ்ச்சிகளை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் படை எடுப்பது உண்டு.

இத்தையை சிறப்புக்குரிய பச்சமலையின் உச்சிப்பகுதியான டாப் செங்காட்டுப்பட்டியை அடைவதற்கு சரியான சாலை வசதி கிடையாது. சாலையில் சில இடங்களில் அபாயம் உள்ளது.மேலும் சரியான பராமரிப்பு இன்றியும் உள்ளது. 

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரதீப்குமார் இன்று பச்சமலைக்கு சென்று அங்குள்ள சாலை வசதிகளை ஆய்வு செய்தார். சாலை பராமரிப்பினை உடனடியாக தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

Similar News