விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்தார் திருச்சி கலெக்டர்
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பழங்குடியின விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.;
திருச்சி மாவட்ட ககெலக்டர் பிரதீப்குமார் இன்று துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதிக்கு சென்ற கலெக்டர் அங்கு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவு தரமாக இருக்கிறதா? என ருசித்து பார்த்தார். பின்னர் அதிகாரிகளுக்கு இதே போல் தினமும் தரமான உணவு வழங்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.