திருச்சி அருகே கோயிலில் திருடியவர் கைது

திருச்சி அருகே கோயிலில் பொருட்களை திருடியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-21 08:45 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எரகுடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில்,  கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இரவு,  சாமிக்கு சாற்றுகிற வெள்ளி மற்றும் தங்கத்திலான ஆபரணங்கள் திருடு போனது. இது தொடர்பாக கோயில் பட்டாச்சாரியார் சேதுமாதவன் கொடுத்த தகவலின் பேரில், கோயில் செயல் அலுவலர் யுவராஜ் உப்பிலியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீசார் முருகூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது,  அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.  அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். இடில், அவர் எரகுடியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மதன் (வயது 24) என்றும், வரதராஜ பெருமாள் கோயிலில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். உடனே அவர் மீது வழக்கு பதிவு கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கோயிலுக்கு சொந்தமான வெள்ளி, அரங்கநாதர் சிலை உள்பட இரண்டரை கிலோ எடையிலான வெள்ளிப் பொருள்கள் மற்றும் அரை பவுன் தங்கத்தால் ஆன பெருமாள் படம் பொறித்த தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News