அ.ம.மு.க.வினர் அமைச்சர் நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
துறையூர் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் திருச்சியில் அமைச்சர் நேரு முன்னைிலயில் தி.மு.க.வில் இணைந்தனர்.;
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இருபது பேர் இன்று திருச்சி தில்லைநகருக்கு வந்தனர்.
துறையூர் நகர அவை தலைவர் அன்பழகன் தலைமையில் வந்த அவர்கள் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து அவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் நேரு சால்வை அணிவித்தார்.