துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு அபராதம்

துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-01-08 11:41 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துறையூரில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கோவிலில் நேற்று அய்யப்ப பக்தர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்று திரண்டனர்.

இதனை அறிந்த நகராட்சி ஆணையர் டிட்டோ, கோவிலுக்கு சென்று தடையை மீறி கோவிலை திறந்ததோடு அதிக அளவில் பக்தர்களை திரட்டியதற்காக அந்த கோவிலுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். இதே போல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்ட பல்வேறு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரே நாளில் அபராத தொகையாக ரூ.15 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த  ஆய்வின்போது சுகாதார அலுவலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் முத்து முகமது, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் அய்யம் பெருமாள் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News