திருச்சி அருகே சொத்து தகராறில் ஒருவர் கொலை: ஒருவர் கைது
குடும்ப சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (வயது 55) மற்று முருகேசன் (50) ஆகிய 2 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்ககவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். முருகேசன் மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு ஆறுமுகம், முருகேசனுக்கு இன்னும் முறையாக சொத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆறுமுகம் தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த சொத்து தகராறில் ஆறுமுகம், தாய் பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த முருகேசனின் மகன் மருதுபாண்டி (27) என்பவர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தில் சரமாரி வெட்டியுள்ளார். இதில் கழுத்து பாதி துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.சுஜித்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து மருது பாண்டியை தேடி வருகிறார். மேலும் ஆறுமுகத்தின் மனைவி பழனியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு மணிகண்டன் (வயது 30) என்ற ஒரு மகன் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிகிறது. இந்நிலையில் இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் (30), கண்ணன் (35) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சொத்து தகராறில் பெரியப்பாவை தம்பி மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.