துறையூர் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திடீர் ஆய்வு
அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை துறையூர் தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின் குமார்இன்று ஆய்வு செய்தார்.;
அம்மா உணவகத்தில் ஆய்வு செய்யும் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்
திருச்சி மாவட்டம் , துறையூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், ஏழை எளிய மக்களுக்கு காலை, மதியம் ஆகிய வேலைகளில் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை துறையூர் தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மற்றும் திமுக நகர செயலாளர் முரளி ஆகியோர் இன்று திடீர் ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர துணை செயலாளர்கள் சுதாகர், பிரேம், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன், இளைஞரணி கிட்டப்பா, தலைமைக் கழக பேச்சாளர் துரைபாண்டியன் மற்றும் வார்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.