துறையூரில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
துறையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
துறையூரில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி மாவட்டம் ,துறையூர் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கணேசன் மணிவேல் ஈஸ்வரன் கீதா அம்சவல்லி கவிதா தனபால் மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவராஜ்,பன்னீர்செல்வம்,பழனிவேல், ஆனந்தன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். .ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், டேங்க் சுத்தம் செய்ய ரூபாய் 700 வழங்கவேண்டும், துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் உடனே வழங்கவேண்டும் ,மாத ஊதியம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் ஆப்பரேட்டர் சங்க தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.