திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க .வேட்பாளர்கள்

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க .வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2021-09-20 16:56 GMT

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மூன்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 2 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 24 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் ஒன்றிய குழு 13-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிராமி சேகரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஓந்தாம்பட்டியை சேர்ந்த ஆர். ஜானகியும்,மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாடிப்பட்டியை சேர்ந்த கனகவல்லியும் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News