துறையூர் அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தை, கண்காணிப்பு கேமராவில் பதிவானது

துறையூர் அருகே 2 பேரை தாக்கிய சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவானது, வனத்துறையினர் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-08-01 09:02 GMT

துறையூர் அருகே கேமிராவில் சிக்கியது சிறுத்தையின் நடமாட்டம்.

துறையூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதை தெரிந்து , ஆர்வக் கோளாறில், அதனுடன் செல்பி எடுக்க சென்ற இளைஞர் ஹரி பாஸ்கரன் (22) என்பவரை மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது,

இதனைக் கண்டு ஹரி பாஸ்கரைக் காப்பாற்ற முயன்ற விவசாயி துரைசாமி (60)உள்ளிட்ட இருவரை சிறுத்தை கடித்து குதறியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

.திருச்சி மாவட்ட வனக்காப்புக் காடுகளில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது முதன் முறையாக சிறுத்தை நடமாட்டம் தொடங்கியுள்ளது.

சிறுத்தையின் தடததை ஆய்வு செய்யும் வனத்துறையினர்.

இச்சம்பவம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து நேற்றிரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டது. காலையில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் ,

தானியங்கி கண்காணிப்பு கேமராவைப் பார்த்த போது அதில் சிறுத்தையின் நடமாட்டம் தெளிவாகப் பதிவாகியிருந்ததைக் கண்டனர்.

மேலும் சுமார் 2 கி.மீ தூரம் வரை பதிந்திருந்த கால்தடத்தைப் பார்த்ததில் , சிறுத்தை நாமக்கல் சரக வனப் பகுதியான கொல்லிமலை அடிவாரப் பகுதிக்கு சென்றுள்ளதை உறுதி செய்தனர்.

இதனால் மீண்டும் சிறுத்தை , திருச்சி மாவட்ட வனப்பகுதிக்குள் வரலாம் என்ற அச்சம் நிலவுவதாலும் ,சிறுத்தை நடமாட்டம் இருந்த ஆங்கியம் பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுலா தலமான புளியஞ்சோலை சுற்றிலும் வனப்பகுதியாக உள்ளதாலும்,

ஆடி 18 அன்று சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வரக்கூடும் என்பதாலும் , அரசின் தடை உத்தரவு நீடிப்பதால் , புளியஞ்சோலை பகுதிக்கு மொதுமக்கள் வரவேண்டாம் எனவும், ஆங்கியம், அழகாபுரி, பிள்ளாபாளையம், R.கோம்பை ஆகிய கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட வனத்துறையினருடன் , நாமக்கல் மாவட்ட வனத்துறையினரும் இணைந்து சிறுத்தையைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News