துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.;
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்று திரும்பிய போது, கீழ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர் ஆற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.