துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ

துறையூரை அடுத்த சங்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு.;

Update: 2021-07-29 15:30 GMT

துறையூர் அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

துறையூரை அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். முகாமில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு மருத்துவப் பணிகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் மகாலிங்கம், நடுவலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வகுமார், திமுக பிரதிநிதி வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் வட்டார மருத்துவர் செந்தில்குமார், மருத்துவர்கள் யோகேஸ்வரன், ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் உமா சங்கர், சதானந்தம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் கொட்டையூர், சங்கம்பட்டி, கருப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 600 பேர் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Tags:    

Similar News