திருச்சி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்
திருச்சி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க .ஸ்டாலின் மதுரையில் நேற்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் நடுவலூர் துவக்கப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன், அப்துல் சமது, ஊராட்சி ஒன்றிய தலைவர் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.