நடமாடும் வாகனம் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்கப்படம் ஒளிபரப்பு
துறையூரில் நடமாடும் வாகனம் மூலம் கிராமப்புறங்களில் அரசின் சாதனை விளக்க திரைப்படம் ஒளிபரப்பபட்டது.;
நடமாடும் வாகனத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க படம்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கையெழுத்திட்ட 5 கோப்புகள் தொடர்பாகவும், பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழுமையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் , மாஸ்க் அணிவது , கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பாகவும், திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு விளம்பரத்துறை வாகனம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த வாகனம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பம்பட்டி, சோபனபுரம், நாகநல்லூர், தளுகை, வைரிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு, கடந்த 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் தமிழக அரசின் சாதனைகளைக் கண்டுகளித்தனர்.