துறையூர் ஒன்றிய குழு அ.தி.மு.க. வேட்பாளர் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

துறையூர் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அபிராமி சேகர் வீடு, வீடாக வாக்கு சேகரித்தார்.;

Update: 2021-10-01 07:43 GMT
துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அபிராமிசேகர் வீடு வீடாக வாக்குசேகரித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தின் 13-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் வருகிற 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அபிராமி சேகர் போட்டியிடுகிறார்.

அபிராமி சேகர் மனு தாக்கல் செய்த நாளிலிருந்து ஓட்டு சேகரிக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அபிராமி சேகர் நேற்று முத்தையம்பாளையம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஒவ்வொருவரையும் பார்த்து தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இன்று மேல நடுவம்பட்டி கிராமத்தில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார் .அப்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்த சாதனைகள் , தான் செய்ய இருக்கும் திட்டங்கள் ஆகியவை அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகம் செய்து ஓட்டு சேகரித்தார். அவருடன் கட்சியின் ஒன்றிய, நகர செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் திரளான அளவில் சென்றனர்.

Tags:    

Similar News