துறையூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

ஆடு மேய்த்த பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு.;

Update: 2021-12-16 05:28 GMT

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர். இவரது மனைவி லட்சுமி (வயது 53). இவர் நேற்று முன்தினம் மாலை தண்ணீர் பள்ளம் என்ற பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் வழி கேட்பது போல், அவர் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து லட்சுமி புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News