திருச்சி மாவட்டத்தில் 5 நகராட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-07 15:28 GMT

திருச்சி மாவட்டத்தில் துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி, துவாக்குடி ஆகிய5 நகராட்சிகள் உள்ளன.இந்த5 நகராட்சிகளின் 120 பதவியிடங்களுக்கு 676 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று 119 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ்பெற்றனர். துறையூர் நகராட்சியில் 10வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக தற்போது மொத்தம் உள்ள  119 பதவி இடங்களுக்கு 544 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என இறுதி வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.





Tags:    

Similar News