திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்கதேவர் தெருவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 41). துணி வியாபாரி. இவர் சம்பவதன்று திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி. அருகே பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தாஜூதீனிடமிருந்து ரூ.5,500 ரொக்கத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, பணம் பறித்து சென்ற அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 21) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தார்.