உலக அயோடின் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்பு

திருச்சி அய்மான் கல்லூரியில் நடந்த உலக அயோடின் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு பங்கேற்றார்.

Update: 2021-10-22 13:00 GMT

திருச்சி அய்மான் கல்லூரில் உலக அயோடின் தின நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

திருச்சி  அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக அயோடின் விழிப்புணர்வு தினம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சுஹாஷினி எர்னஸ்ட் வரவேற்புரையாற்றினார். இதில் கலெக்டர் சிவராசு அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்தும் விளக்கி கூறினார்.

மேலும் கலெக்டர் முன்னிலையில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, உப்பில் அயோடின் கண்டறியும் செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு செய்து காண்பித்தார். மேலும், உணவு பொருட்களில் எளிதில் கலப்படத்தை கண்டறியும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கத்தையும் மாணவியர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 நபர்கள் பங்கேற்றனர். மேலும் கல்லூரி இயக்குனர் டாக்டர் சாகுல் ஹமீது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  உப்பு நுகர்வோர் பாதுகாப்பு மாவட்ட தலைவர் டாக்டர் மோகன் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், ஸ்டாலின், வசந்தன், அன்புச்செல்வன், ஜஸ்டின், பாண்டி, சண்முகசுந்தரம் மற்றும் வடிவேல் ஆகியோர்  இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News