திருச்சி அருகே சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 316 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவி

திருச்சி அருகே நடந்த சிறப்பு மனு நீதி முகாமில் 316 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.

Update: 2023-11-29 11:31 GMT

திருச்சி அருகே நடராஜபுரத்தில் நடந்த சிறப்புமனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நடராஜபுரம் ஊராட்சி கலைஞர் கலையரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (29.11.2023) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 316 பயனாளிகளுக்கு ரூபாய் 2.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிளை வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-

தொலைதூரத்து கிராம மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் பயனடைகின்ற வகையில் உரிய துறை அலுவலர்கள் மக்களிடம் எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன்மீது உடனடி தீர்வு கண்டு திட்ட உதவிகள் வழங்கிடும் வகையிலும் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். பொதுமக்களாகிய நீங்கள் அத்திட்டங்களை கவனித்து பயனடைந்திடவும், மேலும், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் அத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் அத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூபாய் 8.82 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் நல ஓய்வு+தியத்திற்கான ஆணையும், 18 பயனாளிகளுக்கு ரூபாய் 2.59 இலட்சம் மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியத்திற்கான ஆணையும், 9 பயனாளிகளுக்கு ரூபாய் 1.29 இலட்சம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையும், 1 பயனாளிக்கு ரூபாய் 14,000 மதிப்பீட்டில் திருமணமாகாத பெண்கள் உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு ரூபாய் 65,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் உதவித் தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூபாய் 68,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையும், 16 பயனாளிகளுக்கு ரூபாய் 33,500 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகையும், 62 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய உழவர்பாதுகாப்பு அட்டைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூபாய் 15.50 இலட்சம் மதிப்பீட்டில் நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 7 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும், 5 பயனாளிகளுக்கு உட்பிரிவற்ற பட்டா மாற்றமும், 5 பயனாளிகளுக்கு நத்தம் உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் ஆணையையும், 47 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களும், 2 பயனாளிகளுக்கு விதவைச்சான்றுகளும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூபாய் 1.40 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்திற்கான ஆணையும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 565 மதிப்பீட்டில் மரக்கன்றுகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 5000 மதிப்பீட்டில் முதலுதவி பொருட்கள் பெட்டகத்தையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 13,680 மதிப்பீட்டில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 21,608 மதிப்பீட்டில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 12,000 மதிப்பீட்டில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு தூய்மைப்பணியாளர்கள் நல வாரிய உறுப்பினா; அட்டைகளையும், மகளிh; திட்டத்தின் சாh;பில் 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 2.17 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளும் என மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூபாய் 2.49 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags:    

Similar News