தண்ணீர் அமைப்பின் தலைவருக்கு திருச்சியில் பாராட்டு விழா

திருச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.;

Update: 2021-11-14 16:11 GMT

தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவிற்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

உணவகக்கல்வி மற்றும் விருந்தோம்பல்துறையில் 50 ஆண்டுகள் கொண்டாடும், தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.பொன்னிளங்கோவிற்கு திருச்சியில்  பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மோகன் குமார் முன்னிலை வகித்தார். கபிலன் வரவேற்றார்.

விழாவில் கலாவதி சண்முகம், உதயகுமார், தண்ணீர் அமைப்பின் செயலர் கி.சதீஸ்குமார், ஏ.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் நகைச்சுவை மன்ற செயலாளரும், தண்ணீர் அமைப்பின் பொருளாளருமான சிவகுருநாதன் ஒருங்கிணைத்து, நிகழ்வை தொகுத்து வழங்கி வாழ்த்தினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சமையல் செப் டாக்டர் தாமு, மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், கவிஞர் தனலெட்சுமி, அசோக் ரெத்தினக்குமார் மற்றும் உணவகத்துறை அறிஞர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து எம்.பொன்னிளங்கோ ஏற்புரையாற்றினார். 

முடிவில் ஆப்பிள் மில்லட் வீரசக்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News