பெல் ஆக்சிஜன் பிளான்ட்டில் மீண்டும் உற்பத்தி செய்ய இயலாது - நிர்வாக இயக்குனர்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஏற்கனவே இருந்த ஆக்சிஜன் பிளான்ட்டில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலாது திருச்சி பெல் நிர்வாக இயக்குநர் முரளி கூறினார்

Update: 2021-05-14 14:15 GMT

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து பெல் நிர்வாக இயக்குநர் முரளியுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பெல் காவேரி விருந்தினர் இல்லத்தில் நேரில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி பெல் நிர்வாக இயக்குநர் முரளி ஏற்கனவே பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்தது.  அந்த பிளான்ட் மூலம் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலாது.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு வேண்டுகோளின்படி புதிய பிளான்ட் அமைப்பதற்கும் 3லிருந்து 4 மாத காலமாகும் அடுத்து வரும் கோவிட் மூன்றாவது அலை தடுக்க ஆக்சிஜன் தேவை என்பதை கருத்தில் கொண்டு அரசுடன் ஆலோசனை நடத்தி அதற்கான பணிகளை துவங்க விரைவில் முடிவு எடுக்கப்படும் என  கூறினார்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்த போது எவ்வளவு சீக்கிரமாக புதிய யூனிட் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அதனை செயல்படுத்தும் என தெரிவித்ததோடு தொடரும் கோவிட் தொற்று அலைகளை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

இதில் பொதுமேலாளர் பாலி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் எம்எல்ஏ சேகரன், பெல் தொமுச தொழிற்சங்க பொது செயலாளர் தீபன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News