துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி
துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி;
திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் துவாக்குடி நகராட்சியும் ஒன்று. துவாக்குடி நகராட்சியின் 5-வது வார்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1579. இதில் பதிவான வாக்குகள் 1,057. இந்த வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் சுயேச்சையாக போட்டியிட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சினேகா (வயது22). 495 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற ஆறு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். சினேகா திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.