திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.;
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் டிசம்பர் 24ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி நினைவு தின நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 24 12 2023 அன்று காலை 8:30 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் நுழைவாயிலில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு,வட்டக் கழக நிர்வாகிகள், எம்,ஜி,ஆர் ,மன்றம் ஜெயலலிதா பேரவை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி ,மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, மருத்துவர் அணி ,இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ,வர்த்தக அணி ,கலை பிரிவு மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நமது கழகத்தினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.