திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
அந்த வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி பாய்லர் ஆலை நுழைவு வாயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானமும் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி மாவட்டத் துணைச் செயலாளர் சுபத்ராதேவி ஒன்றிய கழக செயலாளர்கள் ராவணன், கார்த்திக், நகர கழக செயலாளர் பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள், பாலசுப்ரமணியன், தண்டபாணி, கூத்தைபார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சின்னதுரை , சம்பத்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சூரியூர்.ராஜமணிகண்டன் , வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.