திருச்சி என்.ஐ.டி. புதிய இயக்குனராக அகிலா பொறுப்பு ஏற்றார்

திருச்சி என்.ஐ.டி யின் புதிய இயக்குனராக அகிலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2022-02-03 17:30 GMT
திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா.

திருச்சி என். ஐ. டி.  இயக்குனராக இருந்த மினி ஷாஜி தாமஸ் பணி மாறுதல் பெற்றதை தொடர்ந்து பேராசிரியர் கண்ணபிரான் பொறுப்பு இயக்குநராகச் செயல்பட்டு வந்த நிலையில், அகிலா என்பவர் திருச்சி என். ஐ. டி யின் புதிய இயக்குனராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியராகப் புதுச்சேரி என். ஐ.டி.யில் பணியாற்றிய தோடு பொறுப்புப் பதிவாளராகப் பதவி வகித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், பிளாக்செயின் தொழில்நுட்பம், பெருந்தரவு பகுப்பாய்வியல், ஆன்டாலஜி பொறியியல், வேதித்தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார்.

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் ஒன்பதாமிடம் பெற்றுள்ள பொறியியல் கல்லூரி என்ற சிறப்புக்குரிய என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி, புதிய இயக்குநரின் தலைமையின் கீழ் மென்மேலும் உயரங்களைத் தொடத் தயாராக உள்ளது. இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொள்கையில், என்.ஐ.டி திருச்சியினை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிகளவில் புலப்படுமாறு செய்வதைத் தம் முன்னுரிமையாகக் கூறினார் .

மேலும் அகிலா மிகச்சிறந்த கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் முத்திரை பதித்த, 32 ஆண்டு அனுபவத்தோடு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News