திருச்சி என்.ஐ.டி. 17-வது பட்டமளிப்பு விழா

திருச்சி என்.ஐ.டி. யின் 17-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 25ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2021-09-23 13:27 GMT

சி.ஐ.ஐ. தலைவர் டி.வி. நரேந்திரன்

என். ஐ.டி. எனப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 17 -வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 25-ம் தேதி மாலை 3 மணிக்கு என். ஐ.டி. வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் நடைபெற உள்ளது‌

இந்த விழாவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியும் ,சி.ஐ.ஐ. எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவருமான டி.வி. நரேந்திரன் முதன்மை விருந்தினராக காணொளி மூலம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

என்.ஐ.டி.நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் பட் பட்டமளிப்பு விழாவை தலைமையேற்று நடத்துகிறார். திருச்சி என். ஐ. டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இந்த விழாவில் இளநிலை பட்டதாரிகள் 875 முதுகலை பட்டதாரிகள் 744 என மொத்தம் 1,793 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. கோவில் நெறிமுறைகளை கருத்தில்கொண்டு பட்டங்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News