திருச்சி தி.மு.க. அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனாரின் 64-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இம்மானுவேல் சேகரனார் உருவபடத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை. அரங்கநாதன், கருணாநிதி, பகுதி செயலாளர் மதிவாணன், சபியுல்லா, கருப்பையா, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர்பொன்.முருகேசன், தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு தலைவர் அய்யப்பன், பொதுச்செயலாளர் சங்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.