திருச்சி பாரத மிகு மின் தொழிற்சாலை ஏ.ஐ.டி.யு.சி. பொது மகா சபை கூட்டம்
திருச்சி பாரத மிகு மின் தொழிற்சாலை ஏ.ஐ.டி.யு.சி. பொது மகா சபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி பாரத மிகுமின் தொழிற்சாலை DTS/AITUC ஆண்டு மகாசபை கூட்டம் கம்யூனிட்டி ஹாலில் இன்று நடைபெற்றது. வே. நடராஜா தலைமை வகித்தார்.துணைத் தலைவர் தீனதயாளன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆண்டறிக்கையை துணைப் பொதுச் செயலாளர் கங்காதரன் வாசித்தார். தீர்மானங்களை சங்க ஆலோசகர் ராஜேந்திரன் முன்மொழிந்தார்.
அறிக்கையின் மீது விவாதங்கள் நடைபெற்று புதிய நிர்வாகிகளாக தலைவர் நடராஜா, பொதுச் செயலாளர் ஆக கைலாஷ்நாத், பொருளாளர் வினோத் குமார், அமைப்பு செயலாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி திருச்சி மாவட்ட ஏ ஐடியுசி பொதுச் செயலாளர் சுரேஷ் HAPP எம்பிளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் இரணியன் பெரம்பலூர் MRF யூனியன் பொதுச் செயலாளர் பிரபாகரன் பெல் சங்கத்தின் செயல்தலைவர் சுப்பையா உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பணி நேரத்தை மாற்றி அமைக்கும் தற்போதைய திட்டத்தை கைவிட வேண்டும், மீண்டும் ஜெனரல் ஷிப்ட் மற்றும் நைட் ஷிப்ட் முறையை கொண்டு வர வேண்டும், திருச்சிக்கு ஆணைகள் அதிகரித்து வரும் நிலையில் ஓவர் டைம் வழங்கி உற்பத்தியை பெருக்கிட வேண்டும், ட்ரிபிள் பி ,எஸ். ஐ. பி. க்கான கூட்டங்களை தனித்தனியே நடத்தி உரிய போனஸ் வழங்க வேண்டும்,ஊரகத்தில் உள்ள வீடுகள் கட்டி 50 வருடங்கள் கடந்து விட்டதால் புதிய வீடுகள் கட்டித்தர ஆவண செய்ய வேண்டும், ஊரகத்தில் அதிகளவில் சுற்றி திரியும் நாய், மாடு, குதிரைகளை போர்க்கால அடிப்படையில அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆமை வேகத்தில் நடைபெறும் பள்ளி கட்டிட வேலைகளை துரிதப்படுத்தி அடுத்த ஆண்டு முழு நேர பள்ளியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஊழியர்களின் மூன்றாவது குழந்தைக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் , கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட ஹாலிடே ஹோம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேர அலவன்ஸ் வழங்குவதை காலம் கடத்தாமல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.