திருச்சி பாலாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருச்சி காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2021-10-08 04:07 GMT

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி  62-வது வார்டு பகுதியை சேர்ந்தது ஸ்ரீ பாலாஜி நகர் விரிவாக்க பகுதி.இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் ஆங்காங்கு மூடப்படாமல் இருப்பதால் தற்போது அவற்றில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆதலால் மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என கோரி மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் ஏற்கனவே சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் ஸ்ரீ பாலாஜி நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் அதன் பொதுச்செயலாளர் பாஸ்கரன், முன்னாள் பொருளாளர் பரமநாதன் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பொதுமக்கள் இடையூறு இன்றி வெளியில் சென்று வருவதற்கு வசதியாக மாற்று பாதை அமைத்து தர வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News