திருச்சி: பஸ்சில் தொங்கி கொண்டு பயணித்தவர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

திருச்சியில் பஸ்சில் படியில் தொங்கி கொண்டு ஆபத்து பயணம் மேற்கொண்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.;

Update: 2021-12-03 10:52 GMT

திருச்சியில் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணித்தவர்களை கீழே இறக்கி அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருவெறும்பூர்,  பெல் பகுதியில் காலை , மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பஸ்சின் படிக்கட்டுகளில்  தொங்கி கொண்டு செல்கிறார்கள்.

இப்படி ஆபத்தான பயணத்தை மேற் கொள்பவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு பஸ்சின் படியில் தொங்கி கொண்டு பயணிப்பதால்  ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அறிவுரைகளை திருச்சி சரக போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு தலைமையில் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கஜபதி, திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் வழங்கி பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News