துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்பு
திருச்சி, துவாக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.;
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி ஆணையராக இருந்து வந்த முஸ்தபா, வந்தவாசி நகராட்சி ஆணையராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, சீர்காழி ஆணையராக இருந்த பட்டுசாமி, துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து புதிய ஆணையரை, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுநல ஆர்வலர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நகராட்சிப் பொறியாளர் விஜய் கார்த்திக் உடன் இருந்தார்.