பாதுகாப்புடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட ஆலோசனை
திருவெறும்பூர் பகுதியில் ரம்ஜான்பண்டிகையை நோய்த்தொற்று காலத்தில் எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை மிக விரைவாக பரவி வருகிறது இதில் திருவெறும்பூர் பகுதியில் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாளை 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் எவ்வாறு சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடன் நடத்தவேண்டும் என்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இதில் திருவெறும்பூர் பெரிய பள்ளிவாசலை சேர்ந்த தீன் என்கின்ற அமீர் முகமது, ஜெய்லானி, நாகூர் ராஜா, நிஜாம், கூத்தைப்பார் சாலையில் உள்ள பள்ளிவாசலை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்