திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-10-19 08:00 GMT

திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

திருவெறும்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்த ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் உடனடியாக திருவெறும்பூர் போலீசார், ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கூத்தைப்பார் கிராம நிர்வாக அலுவலர் ராதிகா கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து இறந்து போன அடையாளம் தெரியாத அந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News