திருவெறும்பூர் தொகுதியில் ரூ.7 லட்சம் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி குமரேசபுரத்தில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கூத்தைப்பார் பேரூர் அரசங்குடி ஊராட்சி அர்ஜுனர் தெருவில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நிதியிலிருந்து ரூபாய் 5.9 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்ப்பணித்து வைத்தார்.
தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசன்குடி ஊராட்சி சிவன் கோயில் பேருந்து நிறுத்தம் ரூபாய் 7 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டதையும் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
மேலும் அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகுமரேசபுரம் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழுதுணைத்தலைவர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டதையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வுகளில் தி.மு.க. தலைமை செயற்குழுஉறுப்பினர் கே.என்.சேகரன் , மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கருணாநிதி , ஒன்றிய பெருந்தலைவர் கோ.சத்யா கோவிந்தராஜ், கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் செல்வராஜ் ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்தி கலியமூர்த்தி ஆகியோரும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.