திருவெறும்பூர்: கட்டட வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
திருவெறும்பூர் அருகே கட்டிட வேலை செய்த போது மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் வீரம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி, இவரது மகன் குமார் (வயது 38). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் கார்மல் கார்டன் பகுதியில் முத்தமிழ்செல்வன் என்பவருடைய வீட்டில் கொத்தனார் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சார மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் குமார் தூக்கி விசபட்டதில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து குமாரை உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.