திருவெறும்பூரில் நிவாரண நிதி ரூ 2000 வழங்கம் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா நிவாரண நிதி ரூ 2000ம் வழங்கும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.;
நாடு முழுவதும் கொரொனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இதனால் பல அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவதோடு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இது கடந்த ஆண்டு முதலே இந்த பிரச்சினை இருந்து வந்தது கடந்த ஆண்டு கொரொனா காலத்தில் பொது முடக்கத்தின்போது பாதிப்பு அடைத்த பொதுமக்களுக்கும் நியாயவிலை குடும்ப அட்டைக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
அதனை அதிமுக செயல்படுத்தாமல் ஆயிரம் மட்டும் வழங்கியது. இந்த நிலையில் திமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீதமுள்ள நாள் ஆயிரத்தை வழங்குவேன் என வாக்குறுதி அளித்து,
அதன் அடிப்படையில் திமுக வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக இந்த மாதம் ரூபாய் 2000 நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் திருவெறும்பூர் காவிரி நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களுக்கு ரூபாய் 2ஆயிரத்தை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது
கொரொனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் வழங்குவதாக அறிவித்திருந்த 4 ஆயிரத்தில் தற்போது முதல் தவணையாக இரண்டாயிரம் வழங்குவதை தொடக்கி வைத்ததாகவும்,
மேலும் கொரொனா தற்பொழுது இரண்டாவது பெரிய அளவில் பரவி வருவதால் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளோடு நடந்த கூட்டத்தில் பொது மக்களுக்கு மருத்துவம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் மேலும் திருவெறும்பூர் சட்டமன்ற ஏழை எளிய மக்களுக்கு நாள்தோறும் குறைந்தது 50 பேராவது உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் அதன்படி தான் தற்போது உணவு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இதில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாரியப்பன், துவாகுடி நகர செயலாளர் காயாம்பு, திருச்சி டிஆர்ஓ பழனி குமார், கூட்டுறவு துறை ஜெஆர் அமராவதி, திருவறும்பூ தாசில்தார் செல்வகணேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கண்ணதாசன், விபி குமார், சோம குணாநிதி, பன்னீர்செல்வம், ஜெயலெட்சுமி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.