மணப்பாறையில் மார்க்கெட் இயங்காது வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
மணப்பாறையில் நாளை முதல் மார்க்கெட் இயங்காது காய்கனி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், இந்த மார்க்கெட்டிற்கு மாற்று இடமாக அனைத்து அடிப்படை வசதியுடன் மஞ்சம்பட்டியிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு பிறகு கொரோனாதொற்று கட்டுப்பட்ட பின் மீண்டும் பழைய மார்க்கெட்டிற்கே மாற்றம் செய்யப்பட்டு வழக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 ம் அலை கொரோனா பரவலால் மீண்டும் காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மார்க்கெட் உரிமையாளர்களிடம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி ஆணையர் முத்து காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், கோவில்பட்டி ரோட்டில், மணப்பாறையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட்டை இடமாற்றி கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால், மார்க்கெட் வியாபாரிகள் உடனே இடமாற்றம் என்பது இயலாதது என்றும், நகருக்கு வெகு தொலைவிலும் அந்த இடத்தில் காய்கறி மார்க்கெட் நடத்துவதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் அதற்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தும்,
அப்படி அனைத்து அடிப்படை வசதிகளுடன் இடம் அமைத்து கொடுத்தால் அது பற்றி பரிசிலீனை செய்யலாம் என்றும், அதுவரை அல்லது ஊரடங்கு காலம் முடியும் வரை மொத்த மற்றும் சில்லறை காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கதினரால் தீர்மானம் நிறைவேற்றம் செய்து காய்கறி மார்க்கெட் விடுமுறை என அறிவித்துள்ளனர்.