திருச்சி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சியில் என்.ஐ.டி. மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள என்.ஐ.டி. மாணவிகள் இருவர் சம்பவத்தன்று மாலை நேரத்தில் வாழவந்தான் கோட்டை ரோட்டில் பேசிக்கொண்டே வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதேப்பகுதியில் உள்ள அம்பாள் நரைச் சேர்ந்த தங்கசாமி (வயது 61) என்பவர் இவர்கள் சென்ற திசைக்கு எதிரில் இருந்து சைக்கிளில் வந்துள்ளார். வந்தவர் திடீரென மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.