திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி அருகே உள்ள கே.சாத்தனூரை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி, வின்னரசி தம்பதியினர். இந்த தம்பதியின் 4 வயது மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தர்.
அப்போது கே.சாத்தனூரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 40). அந்த பகுதியில் வேலை செய்து வருவதாகவும் அவர் அந்த குழந்தையை ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் வின்னரசி அங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் ஆரோக்கியதாஸ் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.