திருவெறும்பூர்: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவெறும்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் 60 பவுன் நகை ஒரு கார் 2 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

Update: 2021-11-18 16:55 GMT

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் தனிப்படை போலீசார் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிக அளவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டி.எஸ்.பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஞானவேலன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், வேலழகன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் ஹரிஹரன், அன்புமணி, விஜயகுமார், நல்லேந்திரன், ராஜேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு, கொலை, கொள்ளைகள் வழக்கில் தொடர்புடைய கரூர் லாலப்பேட்டை காவல் சரகத்தை சேர்ந்த சங்கர் (எ) வெட்டு சங்கர் (வயது 34) மற்றும் கோபால் ( எ) கருப்பத்தூர் கோபால், தொட்டியம் தாலுகா கொளக்குடியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் செல்வகுமார் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் கொலையுண்டு இறந்துபோனன். இந்நிலையில் நேற்று அதிகாலை அம்மன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர் மற்றும் செல்வக்குமார் ஆகிய இருவரை திருவெறும்பூர் தனிப்படைபோலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் கருப்பத்தூர் கோபால் மனைவி பொன்மணி (வயது 36) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பொன்மணியை கைது செய்ததோடு, அவருடன் தொடர்புடைய தொட்டியததை சேர்ந்த பிச்சை மகன் ஜெகன் (வயது 46) உட்பட 4 பேரையும் கைது செய்து திருவெறும்பூர் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட திருவெறும்பூர், பெல், நவல்பட்டு பகுதியில் கொள்ளை போன ரூ. 20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.


மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2  இருசக்கர வாகனங்கள் வரும்போது தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை திருச்சி எஸ்.பி.மூர்த்தி பாராட்டினார்.

Tags:    

Similar News