திருச்சி அரியமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள உக்கடை சந்தைப்பேட்டை அருகே அரியமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரித்ததில், அந்த வாலிபர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.