திருச்சி மாவட்டத்தில் பறிமுதல் வாகனங்கள் ரூ.9.38 லட்சத்துக்கு ஏலம்

திருச்சி மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.9.38 லட்சத்துக்கு ஏலம் போயின.;

Update: 2022-01-08 11:25 GMT

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட 93 வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டன.கூடுதல் எஸ்.பி. சுஜாதா, கலால் உதவி கமிஷனர் வைத்தியநாதன், தானியங்கி பணிமனை பொறியாளர் அரசு, மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி. முத்தரசு ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதில், 88 டூ வீலர்கள், மூன்று சக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 3 ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 300 அரசு நிதியில் செலுத்தப்பட்டது. இத்தகவலை, திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News