மரம் நடுவிழாவில் பங்கேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி அருகே நடந்த மரம் நடுவிழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.;
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு கூத்தப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் மரக்கன்று நட்டினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இன்று மரம்நடு விழா கூத்தப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி வனத்துறை சார்பாக மா, பலா, தென்னை ,முருங்கை, வில்வம், வேம்பு,அரசை உட்பட சுமார் 450 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பேரூராட்சியின் சார்பில் நடப்பட்டது,
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தொழிற் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகளுடன் மரங்களை நட்டு வைத்தார்
மேலும் இந்நிகழ்வில் கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், கூத்தப்பர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியாண்டி, திருச்சி வனசரக அலுவலர் ரவி ,சரக வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார் உட்பட கூத்தப்பர் பேரூராட்சி கவுன்சிலர்கள், கூத்தப்பதார் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.