ஆராய்ச்சி பணி: மத்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம்

அவசர நிலை பதிலளிப்பு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம் செய்து உள்ளது.

Update: 2021-11-22 15:24 GMT

ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக திருச்சி என்.ஐ.டி.- சி.டி.ஏ,சி.டி. நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் எனப்படும் என்.ஐ.டி. இந்தியாவில் உள்ள32 என்.ஐ.டி.க்களின் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அந்த வகையில் நாட்டின் சிறந்த உயர் கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி. பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும் திறம்பட செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் மத்தியஅரசின் தகவல்அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும்  சி.டி.ஏ.சி.டி. நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள இடர்பாடு அழைப்பு பதிலளிப்பு மேலாண்மை தொடர்பாக இந்த ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் சி.டி.ஏ.சி.டி. நிறுவனத்தின் திட்ட இயக்குனர் கலைச்செல்வன், திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


Tags:    

Similar News