பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் 10 நிமிட போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி அரிய மங்கலத்தில் 10 நிமிட போராட்டம் நடந்தது.;

Update: 2021-12-10 12:15 GMT

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சியில்  10 நிமிட போராட்டம் நடந்தது.

இன்று காலை  திருச்சி அரியமங்கலம் பாலம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பத்து நிமிட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு  ஜனநாயக சமூக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார் .

அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் லதா -அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஷைனி -மக்கள் உரிமை கூட்டணி சார்பில் ஜோசப்-அகில இந்திய ஏழை மக்கள் கட்சி சார்பில் ஜான் பாஷா - தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ரகுஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்

Tags:    

Similar News