பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்டதாக இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2022-01-16 05:45 GMT

பைல் படம்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 39). இவர் தனது நண்பர் சந்துரு என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 ஆயிரம் கடன் கேட்டார். இதில் தன்னிடம் பணம் இல்லை என கூறிய சந்துரு அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த கார்த்திக் (41) என்பவரிடம் பணம் வாங்கி கொடுத்தார்.

வாங்கிய கடன் தொகையை சூர்ய பிரகாஷ் திரும்பவும் சந்துருவிடம் கொடுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சூர்யபிரகாஷ் தனது வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கார்த்திக், வாங்கிய கடனை கொடுக்க முடியாதா? என கேட்டு ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த சூர்யபிரகாஷ், சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் கார்த்திக், இவரது நண்பர் தினேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து கார்த்திக் புகாரின் பேரில் சூர்யபிரகாஷ் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News